தமிழ்,தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகை நிவேதா தாமஸ். இவர் தொடர்ந்து எந்த மாதியான கேரக்டரில் நடிக்க விரும்புகிறார் என்பதை பற்றி ஊடக மக்களிடம் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கில் 118, ‘ப்ரோசெவரெவருற’ ஆகிய படங்களில் நடித்த இவர் கடையாக தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நிவேதா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வி’. இந்த கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ‘வி’ படமும் ஓடிடியில் வெளியாகியுள்ளது. நானி லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் நிவேதா தாமஸ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நானி மற்றும் சுதீர் பாபு இவர்களுடன் இப்படத்தில் 'கிரைம் நாவல்' எழுதும், அபூர்வா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆறு மாதங்களாக நிறைய கதைகள் கேட்ட நிவேதா அதிலிருந்து சில கதைகளை செலைக்ட் செய்து வைத்துள்ளாராம். எத்தனை படங்கள் நடிக்கிறோம் என்பதை விட எப்படிப்பட்ட கதைகளில் நடிக்கிறோம் என்பதையே மேலாக கருதும் இவர் நல்ல படங்களையே தொடர்ந்து கொடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்...