தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக இருப்பதாகவும் எதிர்பாராத விதமாக நடந்த ஆம்புலன்ஸ் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டைக்கு வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை ஆய்வு செய்த அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் தான் கூடுதல் கவனத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளர்வுகள் அளிக்கப்பட்ட இந்த நேரத்தில்தான் நாம் மிகமிக கவனத்துடன் இருக்க வேண்டுமெனவும் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சுகாதார நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக இடைவெளியையும் தவறாது பின்பற்ற வேண்டும் எனவும் கூறினார்.