சட்டமன்றத்தில் இடி, மின்னல், மழை நீங்க எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சுப்பு, துரைமுருகன், அண்ணன் ரஹ்மான் அவர்கள் உலா வந்தார்கள் தமிழகம் முழுவதும். அப்போது கலைஞர் தான் அந்த பெயரை சூட்டினார் . சட்டமன்றத்தின் அராஜகத்தை பற்றிஇடி, மின்னல் ,மழை என்ற தலைப்பில் பேசி விட்டு வாருங்கள் என்று கூறினார். துரைமுருகன் அண்ணனுக்கு வழங்கப்பட்ட தலைப்பு 'மின்னல் ' . மின்னல் என்பது வான் மண்டலத்தில் நொடிப்பொழுதில் தோன்றி மறைந்து விடும் அதுதான் மின்னல்.

அந்த வகையில் பார்த்தால் நம் துரைமுருகன் அவர்கள் 50 வருடமாக இந்த கழகத்திற்குள் ஒளியை பாய்ச்சிக் கொண்டிருக்கிறார். அதுதான் உண்மை , அவர் இருக்குமிடம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும், கலகலப்பாக இருக்கும் , எல்லோரையும் மகிழ்விக்க கூடியவர் அவர் எனவும் அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர் அவர் எனவும் அனைவருடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையிலே பணியாற்றக் கூடியவர் அண்ணன் துரைமுருகன்.

அவர்கள் எனவும் தனிப்பட்ட முறையிலே எனக்கு அது குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி அரசியல் பிரச்சினையாக இருந்தாலும் சரி வாழ்க்கை பிரச்சனையாக இருந்தாலும் எனக்கு ஒரு ஊன்றுகோலாக உற்றதுனையாக இருக்கக் கூடியவர் ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் எனவே உங்களை வாழ்த்துகிறேன், போற்றுகிறேன் தம்பி என்ற முறையிலே உங்களை வணங்குகிறேன் நன்றி எனக்கூறி மு.க ஸ்டாலின் தனது உரையை முடித்துக்கொண்டார்.