பாலிவுட்டில் அமீதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் ‘பிங்க்’. இதன் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கை அஜித்தை கொண்டு ‘நேர்க்கொண்ட பார்வை’ என இயக்கிருந்தார் ஹெச்.வினோத். தற்போது இதன் தெலுங்கு ரீமேக் வேலைகள் நடந்து வருகிறது.

சமீப காலங்களாக பெண்ணிம் பேசும் திரைப்படங்கள் அதிகமாக வெளிவரத் துவங்கிவிட்டது. ஹீரோயின்களை மையமாக கொண்டு கதைகளை உருவாக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வரிசையில் மிக முக்கியமானது ‘பிங்க்’ திரைப்படம். இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த அந்த திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

‘வக்கில் சாப்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பவன் கல்யாணின் பிறந்த நாள் பரிசாக போனி கபூர் வெளியிட்டுள்ளார். அரசியலுக்காக சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் மீண்டும் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழில் தயாரித்த போனி கபூரே தில் ராஜுவுடன் இணைந்து இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார்.