பின்னணி பாடகர் எஸ்பிபியின் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்த தமிழக அரசிடமோ, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடமோ உதவி கோரவில்லை என எஸ்பிபி சரண் மறுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அமைந்தகரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்டண விவரத்தை வெளியிட முடியாது என மறுத்தார். தனது தந்தைக்கு எவ்வளவு செலவு செய்தது என்ற விவரத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றும் சரண் கூறினார்.

இறுதி சடங்கிற்கு நடிகர் அஜித் வராதது குறித்த கேள்விக்கு, அவர் தனது நல்ல நண்பர் எனவும் நேரில் வராவிட்டாலும் வீட்டிலிருந்து வருத்தப்பட்டு இருப்பார் என்றும் பதிலளித்தார்.