நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து மசோதாக்கள் சட்டமானது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாய உற்பத்திப் பொருட்கள் விற்பனை மற்றும் வணிக மசோதா 2020 நிலை குருதி மற்றும் பண்ணை சேவைகள் விவசாயிகள் ஒப்பந்த மசோதா இந்த மூன்று வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும் பஞ்சாப் ,ஹரியானா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிலும் இம்மசோதாக்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது என்றும் குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் 3 மசோதாக்களுக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கும் வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். நீ தொடர்ந்து 3 மசோதாக்களும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதுதவிர தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான மசோதாவுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கிடையே மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடத்த உள்ளனர்.