சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளார்கள் என்பதும் தெரிந்தது.

இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இதில் இரண்டு நாயகிகள் இருப்பதால் யாருக்கு யார் ஜோடியாவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனிடையே ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாகத்தான் நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து விஜய் சேதுபதிக்கு சமந்தாதான் ஜோடி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும், ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பும், ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளி நாட்டில் நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும். அதன் பின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்...