போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது , பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிக படுத்தப்படும் எனவும் மாவட்டத்திற்குள் இயக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதேபோல ஒரு மாவட்ட எல்லையில் இருந்து அருகாமையில் இருக்கக்கூடிய பேருந்து நிறுத்தமானது கடைசியில் நபர்கள் இருக்கும் வரை இயக்கப்படும்.

அதாவது ஒரு மாவட்ட எல்லை முடிகிறது என்றால் ஒரே ஒரு நபர் மட்டும் அடுத்த மாவட்டத்திற்கு உள்ளே ஒரு கிலோ மீட்டருக்கு அருகாமையில் இருந்தால் அவரை நடந்து செல்ல சொல்ல முடியாது என்ற காரணத்தினால் அந்த சிறுசிறு தலைப்புகளும் கடைபிடிக்கப்படும் எனவும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவதற்காக முதலமைச்சர் அவர்கள் மருத்துவ வல்லுனர்கள் உடைய ஆலோசனைகளை கேட்டு இந்த ஊரடங்கு உத்தரவு பேருந்துகளை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் எடுத்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது பொதுமக்களின் ஆணைக்கு இணங்க ஒரு சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளோம்.

படிப்படியாக மக்களின் தேவைக்கு ஏற்ப மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிவெடுத்து என்ன அறிவிக்கிறார்களோ அதன் படி போக்குவரத்து கழகங்கள் இயக்கப்படும் எனவும் அதேபோல் கொரோனாவிற்கான பரிசோதனையானது அனைவருக்கும் தேவைப்படாது எனவும் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனையானது தேவைப்படும் எனவும் பேருந்து ஓட்டுனர் களுக்கும் நடத்துனர் களுக்கும் பேருந்தினுள் இருவரும் சமூக இடைவெளியை கடை பிடிப்பதற்காக இடையே பை போன்ற குழாயை இணைத்திருக்கிறோம் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.