கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் பரங்கிமலை வழியே மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்று தொடங்கிய நிலையில் சேவை நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சேவை இன்று தொடங்கியது. முக கவசம் ,உடல் வெப்பநிலை போன்றவை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.