தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 791 பேருக்கு வரலாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோணா பாதிப்பும் ஒருமுறை ஒரு வீதமும் ஒரே அளவாக பதிவாகி வருகிறது .ஒரே நாளில் 5 ஆயிரத்து 706 பேர் கொரோணா பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நோய் தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 9313 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 5796 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதுவரையிலான பாதிப்பு 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக பதிவாகியிருக்கிறது.

46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக ஆயிரத்து 750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 596 பேரும் சேலம் மாவட்டத்தில் 378 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 296 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 282 பேரும், கடலூர் மாவட்டத்தில் 256 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 202 பேரும், ஒரே நாளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.