சென்னையில் கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்‌ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பெருநகர காவலர் மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் அந்த இரண்டு மாதங்களில் சென்னையில் மட்டும் 800 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை தடுக்க தொடர் கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

குற்றச் சம்பவங்கள் நடைபெற்று கடந்த நான்கு மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு வருவதாகவும் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். அவர் பேசுகையில் கடந்த இரண்டு மாதங்களில் 800 கிலோவிற்கு மேல் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். ஒரு குற்றவாளியை பிடித்தம் என்றால் அவர் இங்கிருந்து வாங்குகிறார் என்று தெரிந்துவிடும் அந்த மொத்த குழுக்களையும் பிடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இது நிறைய வெற்றிகளை இருக்கிறது இதை தொடர்ந்து நாங்கள் செய்வோம் என அவர் கூறியுள்ளார்.