சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் இயங்குவதற்கான கால அட்டவணை வெளியாகியிருந்த நிலையில் தெற்கு ரயில்வே இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. செப்டம்பர் ஏழாம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை கால அட்டவணையும், மொத்தம் 76 புறநகர் ரயில் சேவைகளின் பட்டியலும் ஊடகங்களில் வெளியாகின.

இதனால் திங்கள் முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் அது குறித்து அதிகாரபூர்வ முடிவெடுத்து அறிவிக்கப்படவில்லை என்று தெற்கு ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் அட்டவணையில் குறிப்பிடப்பட்டது போல் சென்னையில் புறநகர் ரயில் சேவை மீண்டும் திங்கள் முதல் தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது சென்னையில் புறநகர் ரயில்களை இயக்குவதற்கான கோரிக்கையை ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி இருப்பதாகவும் , ரயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் வந்த பிறகே புறநகர் ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.