தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் படத்தின் பாடல்கள் அனைத்துமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ரிலீஸுக்காக காத்திருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கூட்டணி அமைக்கவுள்ளார். இதற்கிடையே வெற்றிமாறனிடம் ஒரு கதையை கேட்ட விஜய் அதற்கு ஓகே சொல்லிவுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வெற்றிமாறன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளதால் ‘தளபதி 65’ படத்தில் இந்த கூட்டணி பணியாற்ற முடியாமல் போனதால் ‘விஜய் 66’க்கு இந்த கூட்டணி இணையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த 66வது படத்தை இயக்க லோகேஷ் கனகராஜின் பெயரும் அடிப்படுவதால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதில் எந்த கூட்டணி உறுதியானாலும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி என்பதில் சந்தேகமில்லை.