பிரதமரின் நிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் முறைகேடு நடந்திருப்பதால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் விவசாயிகள் அல்லாதோர் பயனடைந்திருப்பதாக தகவல் வெளியாகிருக்கிறது. இதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் 7 பேர் மீது இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக கிசான் திட்டத்தில் விவசாயிகள் மட்டுமே பயன்படும் வகையில் மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது.

ஆண்டுக்கு 6000 ரூபாய் அந்த திட்டம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் மட்டுமே குறிப்பாக ஒரு குடும்பத்தில் நான்கைந்து பேர் விவசாயியாக இருந்தாலும் ஒருவர் மட்டுமே அதில் பயன்பெற முடியும். மக்கள் பிரதிநிதியோ, அரசு ஊழியர்களோ, மத்திய மாநில அரசு உடையவர்களோ இதில் பயன்பெற முடியாது, விவசாயியாக இருந்தால் கூட பயன்பெற முடியாது. இப்படி உள்ள திட்டத்தில் விவசாயிகள் யார் யார் என்று கண்டறிந்து வேளாண்மைதுறை மூலியமாக ஆய்வு செய்த பிறகுதான் இந்தத் திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்பட்டது. ஆனால் அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வேளாண்மைத்துறை நேரடியாக ஆய்வு செய்யாமல் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று தளர்வு அளிக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 6 லட்சத்திற்கும் அதிகமானோர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் விண்ணப்பித்துள்ள 5 லட்சம் பேர் விவசாயிகள் அல்லாதோர் என்று தெரியவந்துள்ளது. முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் ஒரு சில நபர்கள் விவசாயிகள் அல்லாத வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வேளாண்மை துறை அதிகாரிகள் விழித்துக்கொண்டு இது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . விவசாயிகள் பெயரைச் சொல்லி ஏமாற்றினால் அவர்களை விட கூடாது என்று தமிழக வேளாண்மைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இப்படியான ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த விசாரணை தொடங்கியது. அது ஆரம்ப கட்டத்தில் உண்மைகள் தெரிய வந்தபோது காவல் துறைக்கு இது சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறைக்கு பிறகு சிபிசிஐடி இந்த விசாரணையை அருள் கையிலெடுத்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேர் இதில் முறைகேடு செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் பேரில் ,40 ஆயிரம் பேர் முறையீடு செய்ததாகவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் பேர் முதலீடு செய்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. மாநிலம் முழுவதும் 5 லட்சம் பேர் என்பது மிகப்பெரிய அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது.