விஜய் டிவி ஒளிப்பரப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமாகி பல கோடி ரசிகர்களை வசியம் செய்து வைத்துள்ளது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பது இந்த நிகழச்சிக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும் இதன் காரணமாக இது நான்காவது சீசன் வரை வந்துள்ளது.

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடம் தள்ளி போகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வீடியோ வெளியானது. இது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.

ரம்யா பாண்டியன், குக்வித் கோமாளி புகழ், நடிகை கிரண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பாகும் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் - 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.