கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலே கவணமீர்த்த நடிகைகள் ஏராளமாக இருந்தாலும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத்க்கு இருக்கும் ரசிகர்கள் தனி ரகம் தான்.

அந்த ஒரு படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றாலும், சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்ட்டு இவருக்கென தனி ரசிகர் கூட்டத்தை உண்டாக்கியுள்ளார். இதைக் கருத்தில்க் கொண்டு அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இழுத்துப் போட பார்த்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால் விஜய் டிவியிடம் ஒரு கோடி கேட்டு அதிர்ச்சியடைய செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் அவர் கேட்ட ரூ. 1கோடி பணத்துடன் பிக்பாஸ் குழு அணுகி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க கூறியுள்ளனர். இதையடுத்து ஷில்பா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக முடிவெடுத்துள்ளாராம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.