சென்னையில் 40 சதவிகித மக்கள் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றி வருவதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் மிக முக்கியமான இந்த நோயைத் தடுப்பதற்கு பெரிதும் உதவுவது முக கவசம் மட்டுமே , ஆனால் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு நாற்பது விழுக்காடு மக்கள் இன்றைக்கு முக கவசத்தை அணிவதில்லை, அப்படியே அணிந்திருந்தாலும் முக்கிய கை கீழாக வைத்திருக்கிறார்கள்.

இல்லையென்றால் கையில் வைத்துக்கொண்டு அந்தந்த சமயங்களில் மட்டுமே முக கவசங்களை முகத்தில் அணிந்து கொள்கிறார்கள். அதுபோல பேருந்தில் செல்லும் போதும் , வரிசையில் நிற்கும் பொழுதும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் இருக்க வேண்டும் எனவும் , மாஸ்க் அணிவதனால் என்ன அதனால் பலன்கள் கிடைக்கும் என்று என்னிடமே நிறைய பேர் கேட்கிறார்கள் என்றும் அதற்கு நான் மாஸ்க் அணியும்போது நம்மிடமிருந்து பிறருக்கும் பிறரிடமிருந்து நமக்கும் நோய் தொற்று பரவாமல் இருக்க பெரிதும் உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் சவாலான மாவட்டங்கள் என்று கோயம்புத்தூர், சேலம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் ஒரு சில மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகம் இருக்காது. சுகாதாரத்துறை மற்றும் மாநில அரசை பொறுத்தவரை எவ்வளவு எண்ணிக்கை என்று பார்க்க மாட்டோம் , எவ்வளவு பரிசோதனை செய்துள்ளோம் அதில் எவ்வளவு பாசிட்டிவ் கேசஸ் வந்துள்ளது என்று பார்ப்போம் என்றும் 37 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் அல்லது பத்து மாவட்டத்திற்கும் கீழ் 7.7 சதவீதமாகவும் உள்ளது எனவும் கிராமப்புறங்களில் உள்ளாட்சி அமைப்பு ஊராட்சி மற்றும் சுய உதவிக் குழுக்களையும் பயன்படுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.