இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 20,000 பேருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 91 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 819 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இதனையடுத்து இந்நோயால் ஏற்பட்ட உயிரிழப்பு 65 ஆயிரத்து 288 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 65 ஆயிரத்து 81 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் கொரோனாவிலிருந்து மீன்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 39 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 7 லட்சத்து 85 ஆயிரத்து 996 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 76.94% சதவிகிதமாகவும் கொரோனாவிற்கு உயிரிழந்தோர் விகிதம் 1.77% சதவிகிதமாகவும் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.