மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி கட்டணம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோவுக்கு சுங்கவரி கட்டணமானது பத்து ரூபாயும், ஒருமுறை சென்று வருவதற்கு 19 ரூபாயும் ,ஒரு நாளில் பலமுறை பயணிப்பவர்கள் 33 ரூபாயும் வசூலிக்க படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காருக்கு 30 ரூபாயும் , வரும் வரை சென்று வருவதற்கு 60 ரூபாயும், ஒரு நாளில் பல முறை பயணிப்பதற்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

காருக்கு மாத கட்டணம் 2390 ரூபாயும் ,ஒரு மாதத்தில் 60 முறை பயணிப்பதற்கு ஆயிரத்து நூறு ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலகுரக வாகனத்திற்கு 49 ரூபாயும், ஒருமுறை சென்று வர 98 ரூபாயும் சுங்கவரி கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்திற்கு 78 ரூபாயும் , ஒரு நாளில் பலமுறை பயணம் செய்வதற்கு 231 ரூபாயும், சரக்கு வாகனத்திற்கு 117 ரூபாயும், நாளொன்றுக்கு 340 ரூபாயும், மாதத்திற்கு 7,500 ரூபாயும் சுங்கவரி கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல அச்சு வாகனங்களுக்கு 234 ரூபாயும், ஒரு நாளில் பலமுறை பயணிக்க 676 ரூபாயும், மாதத்திற்கு 15 ஆயிரத்து நூற்றி பத்து ரூபாயும் புதிய கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தின் மாநில நெடுஞ்சாலை களுக்குச் சொந்தமான சுங்கச்சாவடிகள் மூன்று மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.