கோரோனா பரவலைத் தடுப்பதற்காக மூடப்பட்ட கோயம்பேட்டு காய்கறி சந்தை 5 மாதங்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்ற சென்னை வளர்ச்சி குழும அதிகாரிகள் சந்தையின் வாயிலைத் திறந்து வைத்தனர்.

கோயம்பேடு சந்தையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி சந்தைகள் செயல்பட்டு வந்த நிலையில் அது 194 கடைகள் மட்டுமே முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளன. காய்கறி மொத்த வியாபாரம் நடக்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ள அதிகாரிகள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். 5 மாதம் வாழ்வாதாரத்தை இழந்து விட்டோம் எனவும்

தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம் எனவும் இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் நாங்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் எனவும் மாஸ்க் இல்லாமல் ஒருபோதும் சந்திப்பில் வர மாட்டோம் எனவும் அங்கிருந்த தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.