பொது முடக்க தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிறகு பேருந்து போக்குவரத்தும் தொடங்கியிருக்கிறது. தமிழகம் முழுவதுமே இன்று முதல் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இன்று காலை 6 மணி முதல் பேருந்துகளை இயக்குவதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். சென்னையை பொருத்தவரை மொத்தம் 36 பணிமனைகளில் இருந்து 3300 பேருந்துகள் சென்னை மாநகரம் முழுவதுமாக இயக்கப்படுகிறது.

அந்த அளவிற்கு முழுமையான பேருந்துகள் இயக்குவதற்காக நடவடிக்கைகளை மாநகர போக்குவரத்துக் கழகம் எடுத்திருக்கிறார்கள். வரக்கூடிய பயணிகள் முகக்கவசம் அணிந்து பேருந்தில் பயணிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் கொடுத்திருக்கிறார்கள். அதேபோன்று ஓட்டுநர்களுக்கு முக கவசம் அணிந்து வலியில் இருப்பதற்கான நடவடிக்கைகளை கொடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்தின் பின்புறம் தான் ஏற வேண்டும். அதேபோல் ஏறும்போதே ஹேன்ட் ஷானிடைசர் பயன்படுத்த வேண்டும். அதை பேருந்தில் வைத்திருக்கிறார்கள். வரக்கூடிய பயணிகள் அனைவரும் அதை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பேருந்தில் பயணிப்பதற்கு கட்டாயம் முக கவசம் அவசியம் அப்படி இல்லை என்றால் உள்ளே நுழைவதற்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் போன்றோர் பேருந்தை இயக்குவதற்கு முன்பே காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். அதன் பின்பே அவர் வாகனத்தை இயக்குவார்கள்.