அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட தளர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் பெரியாரின் சிலை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் 50% இருக்கைகள் நிரப்பும் அளவியிலேயே திரையரங்குகளை திறக்கும் அளவிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் 15-ம் தேதிக்கு பின் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள் பயிற்சியை மேற்கொள்ள வசதியாக நீச்சல் குளங்களை திறக்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொரோணா எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31ம் தேதி வரை கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற இடங்களில் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி, கலாச்சார விளையாட்டு ,அரசியல் மற்றும் மதரீதியான நிகழ்ச்சியில் 100 பேர் மட்டும் பங்கேற்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூடப்பட்ட அரங்கினில் நிகழ்ச்சிகளை நடத்தினால் 50சதவீத நபர்கள் அல்லது 100 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது .