தமிழக சட்டப்பேரவை கூட்டம் 14ஆம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலைவாணர் அரங்கத்தில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பேரவைச் செயலாளர் சீனிவாசன் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக கட்டடத்தில் இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்திற்கு பதிலாக கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு சபாநாயகர் தனபால் கலைவாணர் அரங்கத்தை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் என்பது செப்டம்பர் மாதம் 24ம் தேதிக்குள் உள்ளாக கூட்ட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படையில் இருக்கின்றது.

அதனடிப்படையில் வரக்கூடிய 14ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரானது மூடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதை சட்டப்பேரவை தலைவர் சீனிவாசன் வெளியிட்டிருக்கிறார். தற்போது இருக்கக்கூடிய கொரோனா பரவல் காரணமாக பேரவையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி ஆகியிருக்கிறது. எனவே அதற்கு மாற்று இடத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்தலாம் என்பதை கருத்தில் கொண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய நூற்றாண்டு விழா கட்டிடம், அதைப்போல கலைவாணர் அரங்கம் , நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு நடைபெற்றது. இறுதியாக தற்போது கலைவாணர் அரங்கத்தில் இந்த நடப்பு ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் கூட்டப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும் இந்த கூட்டத் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 14ம் தேதி கூறக்கூடிய இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகபட்சமாக நான்கு நாட்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றது. ஏனென்றால் இந்த நான்கு நாட்களில் கேள்வி நேரத்திற்கான வாய்ப்புகள் இருக்குமா என்பது தொடர்பான தற்போது வரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. இருப்பினும் அன்றைய நாளில் அலுவல் ஆய்வுக்குழு கூடி நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவது எவ்வளவு மணி நேரங்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் உள்ளன.