‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படத்தை தொடர்ந்து டைரக்டர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள படம் ‘பூமி’. இந்த படம் அவரின் கேரியரில் இது 25வது படம் என்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ‘தமிழனென்று சொல்லடா’ எனும் பாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 10-ந் தேதி, நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளன்று இப்பாடல் வெளியிடப்பட உள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.