நீதிமன்ற உத்தரவை மீறி 40 விழுக்காட்டிற்கும் அதிகமான கட்டணத்தை வசூலித்த 108 தனியார் பள்ளிகளுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் இயக்ககம் தகவல் அளித்துள்ளது.

மாவட்ட வாரியாக கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் பள்ளிகள் குறித்த புகார்களை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கப்பட்டன. இதுவரை 108 பள்ளிகள் மீது பெட்ரோல் தரப்பில் புகார் தெரிவித்திருப்பதாகவும் அப்பள்ளிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார்கள் உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தனியார் பள்ளிகள் இயக்ககம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட மொத்த கட்டணத்தில் 40 விழுக்காடு செப்டம்பர் முப்பதாம் தேதிக்குள்ளும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் 35 விழுக்காடு கட்டணமும் வசூலிக்கப்படலாம் .