கோலிவுட்டில் சிறந்து விளங்கிய நட்சத்திர குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தாலும் தனது சொந்த முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து முன்னுக்கு வந்துள்ள வாரிசு நடிகர் தான் அருண் விஜய். இவரை ஹீரோவாக திரையில் கண்டு ரசிக்கும் ரசிகர்களை விட வில்லனாக ரசிக்கும் ரசிகர்களே அதிகம்.

எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இந்த கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தபடியே செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது புதிய கெட்டப்பை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த தோற்றத்தில் அருண் விஜய் X -மேன் போன்று இருப்பதாக பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். Wolverine தோற்றத்தில் மிரட்டுறீங்க ப்ரோ எனவும் அவருக்கு கமெண்ட் கிடைத்து வருகிறது.

அருண் நடிப்பில் தற்போது பாக்ஸர், சினம், அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இது தவிர வேறு சில அறிவிக்கப்படாத படங்களும் இவரின் கைவசம் உள்ளது, அவற்றில் எதாவது ஒரு படத்தில் இவர் இந்த கெட்டப்பில் வந்து அசத்துவாரா என பார்க்கலாம்.