உலக அளவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கிய செயலிகளுள் டிக் டாக் கும் ஒன்றாகும். சாதாரண மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு களமாக இது உள்ளது. இதனால் பல நன்மைகள் இருப்பினும் இது பயன்படுத்த பாதுகாப்பானது அல்ல என உளவுத் துறையானது எச்சரித்துள்ளது. ஆதலால் சீன நாட்டின் செயலியான டிக் டாக் ஆனது இந்தியாவில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் டிக் டாக்கை தடை செய்து கொண்டு வருகின்றன. இவ்வாறு அமெரிக்க நாட்டின் அதிபரான டிரம்ப் டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக டிக்டாக் நிறுவனமானது அமெரிக்க நாட்டின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என தங்கள் செயலியை தடை செய்ய முயல்வதாக வழக்கு தொடர்ந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தங்கள் மீது எவ்வித ஆதாரமுமின்றி தங்கள் நிறுவனத்தை தடை செய்ய முயல்வதாக அதிபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிபர் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது அதில் இதுவும் ஒன்றாகும் என குறிப்பிடத்தக்கது