இன்று கொரொனாவால் உலகமே முடங்கியுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல், வேலைக்கு செல்லாமல் கடந்த 6 மாதங்களாக வீடே உலகமென்று வாழ்ந்து வருகின்றனர். பல துறைகள் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

சினிமா துறை மிகவும் மோசமாக முடங்கியுள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு சில நாடுகள் திரும்பி வருகின்றது. திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் மனம் நொந்து உள்ளனர். இந்நிலையில் 41 நாடுகளில் கடந்த வாரம் ‘TENET’ படம் வெளிவந்தது, இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், எதிர்ப்பார்த்தை விட இப்படம் பல மடங்கு அதிகம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது, திரையரங்குகள் திறக்கப்பட்ட நாடுகளில் மட்டும் வெளியான இந்த படம் 51 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாம். இவை இந்திய மதிப்பில் ரூ 381 கோடியை தாண்டுமாம்.

மேலும், இங்கிலாந்தில் 7.1 மில்லியன் டாலர், பிரான்ஸ் நாட்டில் 6.5 மில்லியன் டாலர், கொரியாவில் 5.1 டாலர் முறையே வசூல் செய்துள்ளததாகும் அறியப்படுகிறது. இந்த கொரோனா ஊரடங்கிலும் நோலனின் இந்த படம் இப்படி ஒரு வசூல் சாதனையும் நிகழ்த்தும் என யாரும் எதிர்ப்பார்க்காததால் இந்த வெற்றியை படக்குழு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.