1996ல் வெளியாகிருந்த பிரபலமான ஹாலிவுட் ஹாரர் படம் தான் ‘Scream’. Wes Craven இயக்கிருந்த இந்த படம் 15 மில்லியன் டாலர் செலவில் உருவாகி 173 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிய தொடர்ந்து அடுத்தடுத்து 4 பாகங்கள் வெளியாகி அனைத்தும் ஹிட்டடித்தது. இறுதியாக வந்த 4வது பாகம் 2011ஆம் ஆண்டு வெளியாகிருந்த நிலையில் தற்போது அதன் ஐந்தாவது பாகத்தை உருவாக்கி வருகிறது பேரமௌண்ட் பிக்சர்ஸ். நீண்ட இடைவெளிக்கு பின் படம் வெளியாவதால் இது ரீ பூட் வெர்ஷனாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Matt Bettinelli and Tyler Gillett இனைந்து இந்த படத்தைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ந்த படத்துக்கு டைரக்டர ஒப்பந்தமாகிருக்காங்க. கடந்த வருடம் வெளியான ‘Ready Or Not’ படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய இவர்கள் இந்த படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுக்க உள்ளனர். இந்த படத்தை 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அன்றைய தினம் நமக்கு பொங்கல் என்பதால் நமக்கு ஒரு ஹாலிவுட் கொண்டாட்டம் இப்போதே உறுதியாகிவிட்டது.