டோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரின் பாகுபலி படம் பெரும் வெற்றியை அடைந்ததை தொடர்ந்து ‘RRR’ படத்தை இயக்குறார். இந்த படத்தின் நடிகர்கள் பட்டியலில் மீண்டும் பாலிவுட் நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘RRR’. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தின் வேலைகள் பல தடைகளை தாண்டி நடைப்பெற்று வருகிறது. இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. நெருப்பு நீர் என வித்யாசமான கான்செப்டில் வெளியான இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் ராஜமௌலி RRR படத்தில் இருந்து ஆல்யா பட்டை நீக்கிவிட்டு நடிகை பிரியங்கா சோப்ராவை புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளாராம். காரணம், மறைந்த சுஷாந்தின் இறப்பில் மக்களால் வெறுக்கப்பட்ட வாரிசு குழந்தைகளில் முக்கியமானவர் நடிகை ஆல்யா பட். இதன் எதிரொலி ஆலியா நடித்துள்ள ‘சடக் 2’ பட ட்ரைலர் அதிகப்படியான டிஸ்லைக்கை சந்தத்தது. இதனால் நிலமையை உணர்ந்து கொண்ட ராஜமௌலி ஆலியாவை நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.