1982ல் வெளியாகி ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்ற த்ரில்லர் படம் தான் ‘தி திங்’. 1938ல் வெளியான ‘Who Goes There?’ எனும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகிருந்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது இந்த படத்தை ரீபூட் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.

ஹாலிவுட்டில் ஹாரர் கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குவதில் பிரபலமான இயக்குனர் John Carpenter. இவரின் இயக்கத்தில் 1982ல் வெளியான படம் தான் ‘தி திங்’. ஆராய்ச்சியாளர்களுக்கு ஏலியன்களால் ஏற்படும் ஆபத்துக்களை ஹாரர் கலந்து சொல்லிருந்த படம் தான் ‘தி திங்’.இந்த படத்தை ரீபூட் செய்யும் விருப்பம் தனக்கு இருப்பதாக Fantasia International Film Festival-ன் போது ஜான் தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான திரைக்கதை விவாதத்திலும் இரங்கியுள்ளாராம். விரைவில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.