மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களில் ‘அன்ட்மேன்’ படங்களின் வரிசை மட்டும் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். காரணம் மத்த சூப்பர் ஹீரோ படங்கள் போல இதில் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியதுவம் இருக்காது மாறாக காமெடி காட்சிகள் அதிகமாக இருக்கும். இந்த உணர்வை டிசி காமிக்ஸில் கொடுத்த படம் தான் ‘Shazam’.
ஒரு சிறுவன் சூப்பர் ஹீரோவாக மாறினால் அங்கே ஆக்ஷனை விட காமெடி தானே அதிகமா இருக்கும். அதே தான் இந்த படத்துலையும் கொடுத்திருந்தது டிசி. ஒரு கட்டத்தில் தனது சக்திகளை புரிந்து கொள்ளும் அச்சிறுவன் பின் அதை கொண்டு மக்களை காப்பது மாதிரியான திரைக்கதையை வடிவமைத்திருந்தனர் Shazam கேரக்டரின் அறிமுக படம் என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது. டைரக்டர் டேவிட் சேன்ட்பெர்க் இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.
இதிலும் Zachary Levi லீட் ரோலில் நடிக்க டேவிட் சேன்ட்பெர்க் படத்தை இயக்குறார், ‘ப்ளாக் ஆடம்’ படத்தோடு தொடர்புடைய இந்த படத்திற்கான திரைக்கதை ப்ளாக் ஆடம் கேரக்டரை சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ‘Fury of the Gods’ என டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, August 25, 2020
Home
‘Fury of the Gods’ என டைட்டில் அறிவிக்கப்பட்ட சூப்பர் ஹீரோ மூவி
Cinema
‘Fury of the Gods’ என டைட்டில் அறிவிக்கப்பட்ட சூப்பர் ஹீரோ மூவி..!
‘Fury of the Gods’ என டைட்டில் அறிவிக்கப்பட்ட சூப்பர் ஹீரோ மூவி..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment