‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு தல அஜித் போலீஸ் வேடமேற்று நடிக்கும் படம் தான் ‘வலிமை’. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் இந்த படத்திற்கு கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

ஹிந்தியில் சூப்பர்ஹிட்டான ‘பிங்க்’ படத்தினை ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் செய்த இந்த கூட்டணி தற்போது ஒரு புதிய ஆக்ஷன் கதைக்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். அஜித்துக்கு போலீஸ் கதாப்பாத்திரம் என்றாலும் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் மீது ஆர்வம் கொண்ட நபராகவும் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார். அவருக்கும் பைக் ஸ்டண்ட் காட்சிகள் இருக்கிறது என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது பரவி வரும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் நடிகர் ராஜ் அய்யப்பா இதில் அஜித்தின் தம்பியாக நடிக்க உள்ளார் என்பது தான். அவர் அதர்வாவின் 100 என்ற படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து இருந்தார். அவர் நடிகர் பானு பிரகாஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பானு பிரகாஷ் அஜித்தின் அமராவதி படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார், இருவரும் நண்பர்கள் என்பதால் அஜித்துக்கு ராஜ் ஐயப்பாவை நீண்ட நாட்களாகவே தெரியும் என்பதால் இந்த வாய்ப்பு ராயப்பாவுக்கு கிடைத்ததாக சொல்லப்படுகிறது.