சிவகார்த்திகேன் நடிப்பில் வெளியான ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘சீமராஜா’ என வரிசையாக படங்கள் இயக்கியவர் தான் பொன்ராம். இவர்கள் கூடணியில் வந்த சீமராஜா படம் மட்டும் சரியாக போகவில்லை. இதை தொடர்ந்து இவர் சசிகுமரோடு கூட்டணி அமைத்தார்.

‘எம்.ஜி.ஆர். மகன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமாரோடு சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கில் பட வேலைகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இடையே கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டதை பயன்படுத்தி படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடித்தது. இதனை அடுத்து சென்சாருக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. கொரோனா பிரச்னைகள் முடிந்ததும் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.