தமிழகத்தில் மக்கள் மீது அக்கறை இல்லாமல் வைரஸ் பெயரைச் சொல்லி கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் "அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் உணவு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மொத்தத்தில் சுகாதாரத்துறை சீரழிந்து விட்டதாக கூறிய ராமசாமி விரைவில் தமிழகத்திற்கு நல்ல எதிர் காலம் பிறக்கும் என்றார்.

அவர் கூறியதாவது நீங்கள் என்ன கண்டுபிடித்து விட்டீர்கள் நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள் லட்சம் படுக்கை அறை இருக்கிறது என்று கூறிய நீங்கள் சாதாரண காய்ச்சல் இருமல் என்றாலே அவர்களை கூட்டிச் சென்று விடுகிறீர்கள். இன்னும் உங்களுக்கு சொன்ன பணம் வரவில்லை என்றால் அவ்வளவு தான் அதுவும் காலியாகி இருக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது மாற்றம் நடைபெறும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.