தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகர்களுக்கான இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகா்த்திகேயன். இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’, நெல்சன் இயக்கத்தில் ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ‘டாக்டர்’ படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், ‘அயலான்’ படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், கருணாகரன், ஈஷா கோபிகர், பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் சிவா மூன்று கெட்டப்களில் வருகிறாராம். மேலும் பாலிவுட் நடிகை ஈஷா கோபிகர் தான் இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் சொல்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்னவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளிவரும் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது.