ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டடித்த படம் தான் ‘அந்தாதூன்’. இதன் தமிழ் ரீமேக்கை டைரக்டர் மோகன் ராஜா இயக்க இருக்கிறார்.

கோலிவுட்டில் சில சக்சஸ் ஃபுல் ரீமேக் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனருக்கான அங்கிகாரத்தை பெற்றவர் மோகன் ராஜா. இவரின் தனி ஒருவன் படம் கோலிவுட் ரசிகர்களை பெரிதும் கொண்டாட செய்திருந்தது. இவர் 90களின் கனவு நாயகன் பிரஷாந்தை லீடாக வைத்து ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக்கை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தை இயக்குனர் மற்றும் நடிகருமான தியாகராஜன் தயாரிக்கிறார். இதில் தபு கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனும், ராதிகா ஆப்தே ரோலுக்கு 2018ல் அழகிப் பட்டம் பெற்ற அணுகீர்த்திவாஸ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளாராம். கதைப்படி கார்த்திக்கின் கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற நடிகராகவே வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.