பாலிவுட் பக்கம் சென்றதில் இருந்தே பிஸியான ஹீரோயினாக இருந்து வருகிறார் டாப்ஸி. ஆரம்பத்தில் இருந்தே நல்ல கதையம்சம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் பின்னர் ஹீரோயின் ஓரியண்டட் கதைகள் அதிகமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தென்னிந்தியத் திரையுலகில் மிக முக்கியமான படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் டாப்ஸி. தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தினை தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இவர் இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார், டாப்ஸி லீட் ரோலில் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் நடிகர் விஜய் சேதுபதி இதில் ஒரு முக்கியம்மான கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காகப் படக்குழுவினர் அனைவரையும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து அழைத்துச் சென்றுள்ளது படக்குழு. ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Monday, August 24, 2020
Home
Cinema
Vijay Sethupathi in a guest role with Topsy
டாப்ஸியோடு கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி
டாப்ஸியோடு கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி
டாப்ஸியோடு கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி
Tags
Cinema#
Vijay Sethupathi in a guest role with Topsy#
டாப்ஸியோடு கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி#
Share This
About Expat guru
டாப்ஸியோடு கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி
Tags
Cinema,
Vijay Sethupathi in a guest role with Topsy,
டாப்ஸியோடு கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment