இ பாஸ் தளர்வு சுகாதாரத்துறைக்கு கடும் சவாலாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கொரோனா பரவுவதை எளிதில் தடுக்க முடியும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடமிருந்து பிளாஸ்மா தானம் பெறுவதற்காக ரத்த பிளாஸ்மா வங்கியை தொடங்கி வைத்தவர் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது கடைசி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு வருவதால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் காய்ச்சல் சளி என்றாலே உடனடியாக மருத்துவமனையை அடைய வேண்டும் எனவும் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.குரானா பிரச்னையை சமாளிப்பது சவாலாக இருந்தாலும் கூட மாஸ்க் அணிவதால் அவற்றில் இருந்து பெருமளவு பாதுகாக்கப் படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சமூக இடைவெளியை கைப்பற்றவும் கை கால்களை அடிக்கடி கழுவுவதும் மற்றவரை தொட்டு பேசுவதையும் நாம் தவிர்த்தல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.