அக்டோபர் 30-ஆம் தேதி டிஜிட்டல் தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இந்நிறுவனம் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை குறிவைத்துள்ளதாம்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிருக்கும் ‘சூரரைப் போற்று’ படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது, ஆனால் நினைத்ததை விட சூழல் மோசமாகிக்கொண்டே போனதால் வேறு வழியில்லாமல் படத்தை டிஜிட்டலில் வெளியிட முடிவெடுத்தனர். அதன்படி ‘சூரரைப் போற்று’ அடுத்த மாதம் 30ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. சூர்யாவின் இந்த முடிவை அடுத்து வேறு சில முக்கிய நடிகர்களும் ஓடிடி தளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரையரங்குகளில் மட்டும் தான் ரிலீஸாகும் என்று பிடிவாதமாக இருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்பட குழு தற்போது தனது முடிவில் இருந்து பின்வாங்க இருப்பதாக கூறப்படுகிறது

‘மாஸ்டர்’ படத்திற்கு ‘சூரரைப் போற்று’ படத்தைவிட அதிக தொகை கொடுக்க அமேசான் நிறுவனம் முன்வந்துள்ளாதால் தயாரிப்பாளர் ஓடிடி பக்கம் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அமேசான் மூலம் கிடைக்கும் வருவாய், சாட்டிலைட் விற்பனை, வெளிநாட்டு உரிமம், ஹிந்தி டப்பிங் உரிமம் என அனைத்தும் சேர்ந்து முதலீட்டை இரட்டிப்பாக்கிவிடும் என்பதால் இந்த ரிலீஸுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது.