கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழிற் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடி வருகிறார். கடலூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்டமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
அதன்பிறகு கொரோனா நோயாளிகளுடன் காணொளி மூலம் கலந்துரையாடலை நடத்தினார்.

பின்னர் கடலூர் மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஹாய் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பல்வேறு பணிகளையும் காணொலி காட்சி மூலம் பார்வையிட்டார். அதன்பிறகு சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுயவுதவிக் குழுவுடன் கலந்துரையாடி வருகிறார். மேலும் அவர்களுடைய பிரச்சினை குறித்து கலந்துரையாடி வருகிறார். இதோடு விவசாயிகளின் பிரச்சினைகளையும் அவர் கேட்டு அதற்குரிய முடிவுகளையும் எடுத்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது அதை எவ்வாறு தீர்க்கலாம் என்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மகளிர் சுய உதவி குழு உடனும் அவர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். கொரோனா காலத்தில் தற்போது இருக்கும் சூழலில் தாங்கள் வாங்கிய கடன்களை கட்ட முடியாத காரணத்தினால் அதுக்கு கால அவகாசம் பெற்று தரவேண்டும் என்று கோரிக்கை அவர்களால் முன்வைக்கப்படுகிறது. அந்த கோரிக்கைகளையும் அவர் கேட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறிவருகிறார்.