கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகை ஷனம் ஷெட்டி தனது குடியிருப்புக்கு அருகிலுள்ள திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த குறவர் இன மக்களுக்கு உதவும் வகையில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக "நம் மக்களின் குரல்" என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி படங்களிலும் நடித்தவர் சனம் ஷெட்டி. இருக்கு எந்த மொழியிலும் பெரிய ஹிட்டோ வரவேற்போ கிடைக்கவில்லை ஆனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 3 இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இதனை தொடர்ந்து ‘வால்டர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இவர் இந்த கொரோனா காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறார்.

"நம் மக்களின் குரல்" என்ற அவருடைய சமூக சேவை குழுவும் ‘ஹெல்ப் ஆன் ஹங்கர்’ என்ற என்ஜிஓ குழுவும் இணைந்து அன்றாட பிழைப்பாளிகளான திருவான்மியூர் குறவர் இனத்தைச் சார்ந்த நூறு குடும்பங்களுக்கு இலவச முககவசங்களும் ரேசன் பொருட்களும் கொடுத்து உதவி உள்ளனர்.