இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்று மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு படமான இதை நிறைய தடைகளுக்கு பிறகு தற்போது உருவாக்கி வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரங்கு மணிரத்னத்தின் கனவிற்கு தற்போது தடைக்கல்லாகியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் மத்திய பிரதேசத்தில் துவங்கவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஐஷ்வர்யா ராயை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் பெரிய பழவேட்டையர் கேரக்டரில் பிரபு நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் ஐஷ்வர்யா ராய் இதில் இரு வேடங்களில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களான விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, த்ரிஷா மற்றும் ஐஷ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விரைவில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என்கிற எதிர்ப்பார்போடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.