சேலத்தில் உள்ள எடப்பாடியில் தனது சொந்த வீட்டிற்கு வெளியே தீபாராதனை, காட்டி தோப்புக்கரணம் போட்டு தன் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.  தமிழக மக்களுக்கும் அவரவர் சொந்த வீடுகளில் விநாயகரை தரிசித்து வருமாறு ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் கூட கூடிய இடங்களில் சிலைகள் வைக்காமல் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் சிலைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கொடுக்கப் பட்டிருக்கின்றது. கடற்கரை அல்லாத இடங்களில் மட்டும் தகுந்த சமூக இடைவெளியோடு சிலையை கரைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.