தெலுங்கு திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரின் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் தென்னிந்தியா முழுவதும் உள்ளது. தற்போது இவரின் புதிய படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த 34 வருடங்களாக டோலிவுட்டில் முக்கிய நடிகராக உள்ளார் நடிகர் நாகார்ஜுனா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘மன்மதுடு 2’ கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இவர் ‘பிரம்மாஸ்த்ரா’, ‘வைல்ட் டாக்’ ஆகிய படங்களில் நடிக்க கவணம் செலுத்தி வந்தார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு வேலைகளும் துவங்கி நடந்து வந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நாகார்ஜுனா இந்த இரு படங்களுக்கு அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. ராம் கோபால் வர்மா இயக்க இருக்கும் இந்த படத்திற்கு ‘சிம்டாங்காரன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் சர்கார் படத்தில் இடம் பெற்ற சிம்டாங்காரன் பாடல் மிகவும் பேமஸான பாடல் என்பதால் படத்தின் டைட்டிலே படத்தின் மீது ரசிகர்களின் கவணம் திரும்ப உதவியுள்ளது.