1998ல Barry Cook, Tony Bancroft இயக்கத்தில் வெளியான அனிமேஷன் படம் ‘முலன்’. டிஸ்னியின் பிரலபமான அனிமேஷன் படங்களில் ஒன்றான இது தற்போது லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. மார்ச் மாதம் 27ஆம் தேதி வெளியாகவிருந்த இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா பாதிப்பால் ரிலீஸுக்கு வாய்ப்பில்லாமல் தள்ளிப்போனது.

டைரக்டர் Niki Caro இயக்கியுள்ள இந்த படம் சீன ராஜ்ஜியத்தை காக்க எதிரிகளோட போர் செய்ய வீட்டுக்கு ஒருவர் போர் வீரர்களா சேர வேண்டிய சூழலில் தன் தந்தைக்கு பதிலா போர் படையில் இணையும் முலன் என்கிற பெண்ணை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இதில் முலன் கதாபாத்திரத்தில் Yifei Liu நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரைலர் படத்தின் மீதான எதிப்பார்ப்பை மிகவும் அதிகரித்து வைத்திருந்தது ஆனால், இந்த கொரோனா வைரஸ் அனைத்து எதிப்பார்ப்புகளையும் தவிடு பொடியாக்கியது.

2019ஆம் ஆண்டிலிருந்தே ரிலீஸுக்காக காத்திருக்கும் இந்த படத்தை தற்போது நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிட டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 4ஆம் தேதி படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. ப்ரீமியர் ஐடிக்கான பேக்கை வைத்திருப்பவர்கள் படத்தை 4ஆம் தேதி முதல் கண்டுகளிக்களாம்