ஷாருக்கான் நடித்த பல வெற்றிப்படங்களை தயாரித்த யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படத்தில் ஷாருக்கான் நடித்தாக வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டதால் அட்லியின் படத்தை தள்ளி வைத்துவிட்டு யாஷ் ராஜ் நிறுவனத்தின் படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார்.

சமீபத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘வார்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் தான் ஷாரூக்கான் நடிக்கும் இப்படத்தை இயக்கவுள்ளார். ‘பதான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகவுள்ளது. ஆகையால், இந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அட்லி படத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ஷாரூக்கான்.

அட்லி படத்தை கைவிட்டுவிட்டார் என்று வெளியான வதந்திகள் எதுவுமே உண்மையல்ல. அட்லி படத்துக்கு முன்பாக சித்தார்த் ஆனந்த் படத்தை முடிக்கவுள்ளார் ஷாரூக்கான் என்பதுதான் புதிய தகவல். ஷாரூக்கான் - அட்லி கூட்டணி தொடர்பான அறிவிப்பு ‘பதான்’ படத்திற்கு பிறகு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அட்லி படத்தைத் தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி இயக்கவுள்ள படத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளார் ஷாரூக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.