தமிழ் சினிமாவிற்கு தனது அறிமுகத்தை கொடுத்ததிலிருந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சமந்தா. 2017ல் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக் கொண்ட இவர் அதன் பின் தமிழ் திரைப்படங்களில் பெரிதும் தென்படவில்லை.

இறுதியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் வந்து சென்றிருந்தார். தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ எனும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதில் நாயகி நயன்தாராவும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் வரிசையாக படங்கள் நடிக்க சமந்தா முடிவெடுத்துள்ளார். தற்போது அதற்காக கதைகள் கேட்டுவரும் அவர் ஒரு அறிமுக இயக்குனரின் கதைக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

அறிமுக இயக்குனர் கௌதம் என்பவர் கூறிய த்ரில்லர் கதை சமந்தாவிற்கு மிகவும் பிடித்து போகவே உடனே சம்மதம் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை முடித்த உடன் இந்த படத்தை துவங்க திட்டமிட்டுள்ளனர்.