அமேசான் ப்ரைம் வெளியிடும் நானியின் அடுத்த படம்...


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கிட்டதட்ட 5 மாதங்களாக திரையரங்குகள் இழுத்து மூடப்பட்டுள்ளது. இதனால் பல நூற்றுக்கணக்காக திரைப்படங்கள் வெளியிட முடியாமல் முடங்கியுள்ளது. இந்த நிலையில் சில தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை நேரடியாக அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல தெலுங்கு நடிகரின் படமும் இணையவிருக்கிறது.

டோலிவுட்டில் பிஸியாக இருந்து வரும் இளம் நடிகர் நானி. இவரின் நடிப்பில் கடையாக வெளியான ஜெர்ஸி, கேங்லீடர் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்த நிலையில், இவரின் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ‘வி’ படத்தை திரையில் வெளியிட முடியாத சூழல் உள்ள காரணத்தால் அமேசான் ப்ரைமில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அது படி படத்தின் வியாபாரமும் நல்ல விலைக்கு பேசி முடிக்கப்பட்டுள்ளதால் படம் வரும் செப்-5ம் தேதி ப்ரைமில் வெளியாகவுள்ளது.

மோகன் கிருஷ்ணா இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹைதாரி, சுதீர் பாபு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.