பிரம்மாண்ட படங்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க படங்களுக்கும் பிரபலமானது ஹாலிவுட் சினிமா. அந்த வரிசையில அடுத்து இணைய இருக்கும் படம் தான் Matthew Vaughn எழுதி இயக்கிருக்கும் ‘தி கிங்ஸ் மேன்’.

சரித்திர பிண்ணனி கொண்ட படமாக உருவாகிருக்கும் இந்த படத்தில் Ralph Fiennes, Gemma Arterton, Rhys Ifans, Matthew Goode, Tom Hollander உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். மார்க் மில்லர் எழுதிய ‘சீக்ரட் சர்விஸ்’ எனும் நாவலை மையமாக வைத்து உருவாகிருக்கும் படத்தின் ட்ரைலர் கடந்த வருடமே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கு கொரோனா மேலும் ஒரு சுமையாக மாறியது.

5 மாதங்களாக எந்த திரைத்துறை பணிகளும் நடைப்பெறவில்லை, பட ரிலீஸ் முற்றிலுமாக முடங்கியுள்ளது, இதனால் பெரும்பாலான படங்கள் ஓடிடி நோக்கி செல்ல துவங்கி விட்டது. இதனிடையே வெளிநாடுகளில் கடும் கட்டுப்பாடுகளுடன் படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹாலிவுட் படங்கள் தியேட்டர் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த லிஸ்டில் ‘தி கிங்ஸ் மேன்’ படமும் இணைய உள்ளது. 2021ஆம் ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.